என்னால் அனுப்பப்படும்
எல்லா குறுஞ்செய்திகளும்
இடம் அறியாமல்
மரணித்து விடுவதை
உன் அலைப்பேசியின்
மவுனம் உணர்த்துகிறது...
உன் பிரத்யேக தொலைபேசியின்
விடையில்லா மணியோசைக்கு
பின்வரும் பதிவு செய்யப்பட்ட
பெண்ணின் குரலும்
பரவசத்தை தவிர்த்து
பயத்தையே தருகிறது...
அடுக்கப்பட்ட நாட்குறிப்பேடுகளில்
தேடி எடுத்து அனுப்பிய
உனக்கான மின்னஞ்சலும்
பாதி வழியிலேயே
குற்றுயிராகி திரும்பி விடுகிறது...
நம் இருவருக்குமான பிரளாத
நினைவுகள் முட்டி சாய்க்க
விழி மீதிருந்து
பிரிந்தோடிய கண்ணீர்
மார்பெங்கும் பறந்தோடி
அணை கட்டி நிற்கிறது
மொழியற்ற வலியின் கவிதையாய்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment